"சின்னம்மா சின்னம்மா".. பிக் பாஸில் பாரம்மா!!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 15 போட்டியாளர்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பவர் ஜூலிதான். வெறும் ஜூலி என்றால் யாருக்கும் தெரியாது. கூடவே, சின்னம்மா சின்னம்மா ஓபிஎஸ்ஸைக் காணோம்மா என்று பாட்டோடு சொல்லிப் பாருங்கள். டக்கென புரிய வரும். ஆம், அதே ஜல்லிக்கட்டு புரட்சிப் போராட்ட முழக்கப் புகழ் ஜூலிதான். தனது அதிரடி முழக்கப் போராட்டத்தால் படு வேகமாகப் புகழ் பெற்றவர் ஜூலி. அவரது பெயரே இப்போதுதான் வெளியுலகுக்கு முதல் முறையாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.



 ஜல்லிக்கட்டு போராட்டத்தில் 'பயங்கரவாதிகள்' ஊடுருவல் - திகுதிகு. ஜல்லிக்கட்டு பற்றிப் பேச திமுகவுக்கு அருகதை இல்லை. ஜல்லிக்கட்டை தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டும்



ஜல்லிக்கட்டுப் பெண் ஒன்இந்தியா தமிழ் இணையதளத்திற்கு முன்பு கூட அவர் அளித்த பேட்டியில் தனது பெயர், ஊர் விவரத்தை வெளியிடவில்லை. ஆனால் ஜல்லிக்கட்டு நடைபெறும் ஊரைச் சேர்ந்தவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேட்டி அளித்திருந்தார் ஜூலி.



 தில் ஜூலி தன்னம்பிக்கையும், தைரியமும், போராட்டக் குணமும் மிக்க பெண் என்பதை அப்போது நமக்கு உணர்த்தியவர் ஜூலி. இதோ இப்போது பிக் பாஸ் களத்திற்குள் நுழைந்துள்ளார். ஜல்லிக்கட்டுப் பெண்ணாக நமக்குத் தெரிந்த ஜூலி தற்போது பிக் பாஸ் ஜூலியாகியுள்ளார். கமலே ஜெர்க் ஆனார் போராட்டக்குணம் படைத்த பெண் என்பதை வெளிப்படுத்தும் வகையில் தலையில் சிவப்புத் துணியைக் கட்டியபடி மேடையேறி நடனமும் ஆடி அசத்தினார் ஜூலி. அவரது தைரியம் கமல்ஹாசனையே கூட சற்று ஜெர்க் ஆக வைத்திருக்கும். பார்க்கலாம், நடிப்புக் கூட்டத்திற்கு மத்தியில் புரட்சிப் புயல் ஜூலி என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. பத்திரமா அனுப்பி வைங்கப்பா ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும் வைக்கலாம்.. ஜூலியின் போர்க்குணத்தை குறைத்து விடாமல், முடிந்தால் கூடுதலாக்கி, கூடவே வெற்றியையும் கொடுத்து அனுப்பி வைத்தால் போதுமானது. இவர் போன்ற பெண்கள்தான் தமிழகததிற்கு தற்போது அதிகம் தேவை.

Comments