இந்த ரூட்ல மெட்ரோ இல்லையா.. அதனால் என்ன, மோனோ வருது பாருங்க!

சென்னை: சென்னையில் ரூ.6,402 கோடியில் இரண்டு வழித்தடத்தில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பு புத்தகத்தில் பொதுபோக்குவரத்தை உயர்த்த மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

after metro now mono rail chennai


ரூ.6,402 கோடியில் 43.48 கிலோ மீட்டருக்கு இரண்டு வழித்தடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான முதல் வழித்தடமாக பூந்தமல்லி - கத்திப்பாரா மற்றும் போரூர்-வடபழனி இடையே ரூ.3,267 கோடியில் மோனோ ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 இதே போன்று 2வது வழித்தடம் வண்டலூர் - வேளச்சேரி இடையே ரூ.3,135 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே ஆலந்தூர்-கோயம்பேடு, ஆலந்தூர்-விமானநிலையம், திருமங்கலம் - நேருபூங்கா உள்ளிட்ட வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவை இல்லாத இரண்டு வழித்தடத்தில் மோனோ ரயில் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments